இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: தமிழகம் இரவில் மின்சாரம் நிறுத்தம் - சிறுவன் கடத்தல்

இரவில் மின்சாரம் நிறுத்தம் - சிறுவன் கடத்தல்

திருவண்ணாமலை அருகில் இருக்கும், தானிப்பாடி பேருந்து நிலையம் அருகே பலசரக்கு  கடை வைத்திருப்பவர் முஹம்மது யாசின். இன்று இரவு அவர் மளிகை கடையில் இருந்தார். வீட்டில் அவரது  வீட்டில் அவரது மனைவி,  13 வயது நிரம்பிய மகன் இருந்துள்ளனர். 

இன்று இரவு 8 மணிக்கு வழக்கம் போல் மின்சாரம் நிறுத்தம் ஏற்பட்டது. அப்போது வீட்டுக்குள் புகுந்த சில இளைஞர்கள் முஹம்மது யாசினின் மனைவியை அடித்துவிட்டு  சிறுவனின் வாயை பொத்தி கடத்திக்கொண்டு பைக்கில் பறந்துவிட்டனர்.

யாசின் மனைவியின் அழுகுரலை கேட்ட அக்கம் பக்கத்தினர் ஒடிவந்து விஷயத்தை கேள்விப்பட்டு உடனே தானிப்பாடி காவல்நிலையத்தில் போய் முறையிட இத்தகவல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சாமூண்டிஸ்வரி கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

மின் நிறுத்தத்தை பயன்படுத்திக்கொண்டு வீட்டுக்குள் வந்து குழந்தையை கடத்திக்கொண்டு போனதை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தானிப்பாடி கிராமத்திற்கு காவல்துறை உயர் அதிகாரிகள் சென்று விசாரித்து வருகின்றனர்.

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)


Latest Articles: