தமிழக முதல்வரின் நீக்கப்பட்டியலில் இடம் பிடித்து தனது அமைச்சர் பதவியை இழந்த புத்தி சந்திரன் மீண்டும், அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதாவின் கோபப்பார்வையில் சிக்கியதால் இதுநாள் வரை வகித்து வந்த மாவட்ட செயலாளர் பதவியையும் இழந்தார்.
இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை: நீலகிரி மாவட்ட செயலராக இருக்கும் புத்திசந்திரன் எம்.எல்.ஏ., ஜெ., பேரவை செயலராக இருக்கும் சுரேஷ்குமார், மாணவர் அணிச் செயலர் நந்தகுமார், உதகமண்டலம் தொகுதி பொறுப்பாளர் அர்ஜுன் ஆகியோர், அப்பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்குப் பதிலாக, நீலகிரி மாவட்ட செயலராக அர்ஜுன், ஜெ., பேரவை செயலராக நந்தகுமார், இணைச் செயலராக சுரேஷ்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
முன்னாள் அமைச்சர் புத்தி சந்திரனுக்கு மீண்டும் இறங்கு முகம்..