இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: தமிழகம் முறைகேடுகள் ஏதுமின்றி விரைவில் அரசுத் தேர்வுகள்: ஆர்.நட்ராஜ்

முறைகேடுகள் ஏதுமின்றி விரைவில் அரசுத் தேர்வுகள்: ஆர்.நட்ராஜ்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக இருந்த செல்லமுத்து, மற்றும் உறுப்பினர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதால், அவர்கள் பதவி விலகினர். புதிய தலைவராக காவல்துறை பணியிலிருந்து ஓய்வுப்பெற்ற அதிகாரி ஆர்.நட்ராஜ் சமீபத்தில் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.நட்ராஜ், முறைகேடுகள் ஏதுமின்றி “குரூப்-1, குரூப்-2, குரூப்-4 தேர்வுகள் விரைவில் நடத்தப்படும் என்றார்.

’தமிழ்நாடு முழுவதும் இருந்து எந்தெந்த துறைகளில் காலிப்பணியிடங்கள் எவ்வளவு உள்ளது என்ற விவரங்கள் கேட்டுள்ளோம்.

அந்த விவரங்களை தருவதற்கு கால அவகாசமும் கொடுத்துள்ளோம். அவர்கள் காலிப் பணியிடங்களின் பட்டியலை தந்த உடன் புதிதாக குரூப்-1, குரூப்-2, குரூப்-4 தேர்வுகள் அறிவித்து முறையாக நடத்தப்படும். நன்றாக தேர்வு எழுதுபவர்களுக்கு பணி நிச்சயம். அவர்கள் எதைப்பற்றியும் கவலைப்பட தேவையில்லை. என்றார்

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)


Latest Articles: