இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: தமிழகம் விஜயகாந்த் சஸ்பெண்ட் தொடர்பாக உயர் நீதிமன்றம் சபாநாயகருக்கு நோட்டீஸ்!

விஜயகாந்த் சஸ்பெண்ட் தொடர்பாக உயர் நீதிமன்றம் சபாநாயகருக்கு நோட்டீஸ்!

விஜயகாந்த் சஸ்பெண்ட் தொடர்பாக உயர் நீதிமன்றம் சபாநாயகருக்கு நோட்டீஸ்!தமிழக சட்டப்பேரவையில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட காரணத்திற்காக தேமுதிக தலைவர் விஜயகாந்தை 10 நாட்கள் சஸ்பெண்ட் செய்தது தொடர்பாக விளக்கமளிக்க சபாநாயகருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் அதிமுக மற்றும் தேமுதிகவினருக்கு இடையே நடைபெற்ற வாக்குவாதத்தின்போது, ஆளும்கட்சியினரை நோக்கி விஜயகாந்த் கை விரல் நீட்டிப் பேசினார் என்ற காரணம்காட்டி அவர்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் அடிப்படையில் பேரவை நடவடிக்கைகளிலிருந்து 10 நாட்கள் விஜயகாந்த் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இதற்கு எதிராக விஜயகாந்த் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில்,

"சட்டபேரவை நடவடிக்கைகளில் கலந்து கொள்ள 10 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளதால் என்னுடைய தொகுதி பணிகள் நிறைவேற்றப்படவில்லை" என்று குறிப்பிட்டிருந்தார்.

இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், வரும் மார்ச் 2 ஆம் தேதிக்குள் விளக்கமளிக்க வேண்டுமென கூறி சபாநாயகருக்கு நோட்டீஸ் அனுப்பியதோடு, வழக்கை மார்ச் 2 ஆம் தேதிக்குத் தள்ளி வைத்தது.

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)


Latest Articles: