கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு பின் தி.மு.க-வின் இளைஞரணியினை வலுவாக்கும் முயற்சியில் தி.மு.க. பொருளாளரும், மாநில இளைஞரணி அமைப்பாளருமான மு.க.ஸ்டாலின் இறங்கியுள்ளார்.
இதற்காக தமிழகமெங்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மாவட்டந்தோறும் நேர்காணல் கூட்டத்தினை நடத்தி வருகிறார்.
இன்று திருச்சியில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் தி.மு.க. இளைஞரணி அணியின் நேர்காணல் கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்துக் கொண்டு பேசுகையில், “இளைஞரணி தான் தி.மு.க.வின் சொத்து. 1950-ல் இளைஞர் அணி அமைப்பு தொடங்கப்பட்ட போது தி.மு.க. கட்சிக்கு தலைவர் கலைஞர், இளைஞரணி தலைவர் மு.க.ஸ்டாலின் என்று கூறினார்கள்.
அப்போது நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டதால் இப்போது வயதானவர்களாக உள்ளனர். எனக்கு 59 வயதாகிறது. வயதானாலும் நான் இளைஞராகவே உணருகிறேன்.
இருப்பினும் இளைஞர் அணியில் மாற்றம் வந்தால்தான் வலு சேர்க்க முடியும் என்பதால் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய தலைவர் உத்தரவிட்டு உள்ளார்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் இளைஞர்கள் தி.மு.க.வுக்கு வாக்களிக்கவில்லை. 1967-ல் தி.மு.க. ஆட்சிக்கு வர அண்ணாவின் பேச்சாற்றல், கலைஞரின் உழைப்பு ஆகியவை இருந்தாலும் இளைஞர்கள், மாணவர்களின் எழுச்சி, இந்தி எதிர்ப்பு போராட்டம் போன்றவையும் முக்கிய காரணம். அத்தகைய உணர்வு உள்ள இளைஞர்கள், இளைஞர் அணியில் இன்றைக்கு தேவை.
தி.மு.க.வில் எத்தனை அணிகள் தி.மு.க.வில் இருந்தாலும் இளைஞர் அணிதான் தி.மு.க.வின் சொத்து." என்றார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் கே.என்.நேரு, முன்னாள் அமைச்சர் செல்வராஜ், திருச்சி சிவா எம்.பி., உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
59 வயதானாலும் நான் இளைஞன் தான்: மு.க.ஸ்டாலின்!
Comments
இப்பதிவுக்கான கருத்துகளின் RSS feed