இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: தமிழகம் மாநில மொழிகளில் ஐ.ஐ.டி., - ஐ.ஐ.எம் தேர்வுகள்: பா.ம.க. கோரிக்கை

மாநில மொழிகளில் ஐ.ஐ.டி., - ஐ.ஐ.எம் தேர்வுகள்: பா.ம.க. கோரிக்கை

பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில தலைவர் கோ.க. மணி  இன்று ஈரோட்டிற்கு வருகை தந்தார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "மத்திய அரசின் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்கு இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நுழைவு தேர்வு இதனால் இந்தி மொழியை தாய்மொழியாக கொண்ட  மாநில மாணவர்கள் எளிதில் சேர முடிகிறது.

இதன் காரணமாக தமிழகத்தில் மிகக் குறைந்த அளவான 2 சதவிகித  மாணவர்கள் கூட மத்திய அரசு நடத்தும் கல்வி நிறுவனங்களில் நுழைய முடிவதில்லை. எனவே ரெயில்வே தேர்வு போன்று இந்த நுழைவு தேர்வினையும் இந்தி, ஆங்கிலம், உருது, மற்றும் அந்தந்த மாநில தாய் மொழிகளில் நடத்தப்பட வேண்டும்.

மின்வெட்டு மின்வெட்டின் காரணமாக ஒட்டுமொத்த தமிழகமும் ஸ்தம்பித்து போய் உள்ளது. மின்வெட்டு நேரத்தை மாற்றி அமைப்பதால் எந்த தீர்வும் ஏற்படாது. தற்காலிக தீர்வாக மத்திய தொகுப்பில் இருந்து தமிழக முதலமைச்சர் கூடுதல் மின்சாரத்தை கேட்டு பெற வேண்டும்.

தமிழகத்திற்கு தேவையான  மின்சாரத்தை மத்திய தொகுப்பில் இருந்து வழங்க பிரதமர் மன்மோகன்சிங் உடனே ஆணை பிறப்பிக்கவேண்டும்.

கூடங்குளத்தில் செயல்படுத்த திட்டமிடப்பட்டிருக்கும் அணு மின் நிலையத்தால் மனித உயிர்களுக்கு தொடர்ச்சியாக கேடு உண்டாகும்.  எனவே அதை மூடிவிட்டு நீர்மின் திட்டம் போன்ற குறைந்த செலவில் ஆபத்தில்லாத மின்திட்டங்களை மத்திய- மாநில அரசுகள் தொடங்க வேண்டும் என்றார்.

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)


Latest Articles: