சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் தி.மு.க-விற்கு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆதரவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் மாநில தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக அரசியலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்ந்து அங்கம் வகித்து வருகிறது.
சங்கரன்கோயில் (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் வரும் மார்ச் 18ஆம் தேதி நடைபெறவுள்ள இடைத் தேர்தலில் தி.மு.க. வேட்பாளர். ஜவஹர் சூரியகுமார்-க்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு அத்தொகுதி வாக்காளர்களிடம் வேண்டுகோள் வைப்பதோடு, தி.மு.க. வேட்பாளர் வெற்றிக்கு எல்லா வகையிலும் பாடுபடுவதென இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முடிவெடுத்திருக்கிறது.
தி.மு.க.வேட்பாளர் வெற்றிக்குப் பாடுபடுவதற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமை நிலையத்தில் இருந்து மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தலைமையில் தேர்தல் பிரச்சாரக்குழு அமைக்கப்பட்டிருக்கிறது.
திருநெல்வேலி மாவட்டத் தலைவர் எம்.எஸ்.துராப்ஷா தலைமையில் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டிருக்கிறது" என பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
சங்கரன்கோவில் இடைத்தேர்தல்: தி.மு.க.விற்கு, இ.யூ.மு.லீக் ஆதரவு!
Comments
- மதுக்கூர் என்.எஸ்.எம்.ஷாகுல் ஹமீது
இப்பதிவுக்கான கருத்துகளின் RSS feed