ஒருவார காலத்திற்குமுன்பு, கடந்த வியாழனன்று முதல்வர் ஜெயலலிதாவும் அவருடைய உடன் பிறவா சகோதரியான சசிகலாவும் யாருக்கும் தெரியாமல் இரகசியமாகச் சந்தித்துக்கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பிரசித்திப் பெற்ற சிறுதாவூர் பங்களாவில் இச்சந்திப்பு நடைபெற்றதாகத் தெரிகிறது.
உணர்ச்சிமயமான இச்சந்திப்பின் போது, சசிகலாவின் கணவர் நடராசனை கைதுசெய்யப்போவது பற்றியும் ஜெயலலிதா சசிகலாவிடம் முன்கூட்டியே தெரிவித்தாராம்.
கடந்த டிசம்பர் 10ம் தேதி சசிகலா ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டை விட்டும் வெளியேற்றப்பட்டார் என்பதும், சசிகலாவிடம் யாரும் எவ்விதத் தொடர்பும் சந்திப்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்றும் டிசம்பர் 12 அன்று ஜெயலலிதா தனது கட்சியினருக்கு அறிவுறுத்தியிருந்ததும் நினைவு கூரத்தக்கது. டிசம்பர் 18 அன்று சசிகலா உள்ளிட்ட அக்குடும்பத்தினர் 12 பேரை அதிமுக கட்சியை விட்டும் ஜெயலலிதா நீக்கிவிட்டதாக அறிவிப்புச் செய்திருந்தார். சதி வெலைகளில் அவர்கள் ஈடுபட்டதாகக் காரணம் வெளியானது. மேலும், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, துக்லக் ஆசிரியர் சோ ராமசாமி ஆகியோரே இதன் பின்னணிக் காரணங்கள் என்பதும் ஊடகங்களில் பூடகச் செய்தி வெளியானது.
இந்நிலையில் ஜெயா- சசி மீண்டும் சந்திப்பு என்ற செய்தி நாடகமா? நாடகமோ, ஊடலோ முடிவுக்கு வந்த அறிகுறியா? என்று கட்சிக்குள் மறுபடி விவாதங்கள் முளை கட்டுகின்றன. மன்னார்குடி குடும்பத்திலிருந்து போயஸ் தோட்டத்தில் இன்னமும் மீதமுள்ளவரும், சசிகலாவின் அண்ணியுமான இளவரசி தான் இந்தச் சந்திப்பை ஏற்பாடு செய்தவர் என்றும் சொல்லப்படுகிறது.
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
ஜெயலலிதா - சசிகலா இரகசிய சந்திப்பு?
Comments
இப்பதிவுக்கான கருத்துகளின் RSS feed