தானே புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க, தமிழக அரசுக்கு நிதி உதவி அளிக்குமாறு, தமிழக முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்தார். அதனடிப்படையில் முதலமைச்சரை சந்தித்து தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகர்கள் நிதி உதவி அளித்து வருகின்றனர்.
தானே புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, நடிகர் ரஜினிகாந்த் நிவாரண நிதி அளிக்க இன்று தலைமை செயலகத்திற்கு வந்தார். பின்னர் அவர் முதல் அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து ரூ.10 லட்சத்திற்கான காசோலையை அவரிடம் கொடுத்தார்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் ஒரு நாள் ஊதியம் மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் இணைவேந்தர் எம்.ஏ.எம்.இராமசாமியின்சொந்த பங்களிப்பான 1 கோடி ரூபாயும் சேர்த்து மொத்தம் 2 கோடியே 8 ஆயிரம் ரூபாய் வழங்கினார்.
மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் நத்தம் ஆர். விஸ்வநாதன், நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.பி. முனுசாமி, கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ, கோயம்புத்தூர் மாநகராட்சி மேயர் செ.ம. வேலுச்சாமி, ஆகியோர் தங்கள் துறை ஊழியர்களின் ஒரு நாள் ஊதிய பங்களிப்பு தொகையினை முதல்வரிடம் வழங்கினார்கள்.
வி.ஜி.பி. குழுமத்தின் தலைவர் டாக்டர் வி.ஜி. சந்தோசம் 10 லட்சம் ரூபாய் வழங்கினார். முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை வழங்கப்பட்ட தொகை 52 கோடியே 41 லட்சத்து 89 ஆயிரத்து 451 ரூபாயாகும்.
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
தமிழக முதல்வர் ஜெயலலிதா - நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு
Comments
www.tamil10.com/
ஒட்டுப்பட்டை பெற
நன்றி
இப்பதிவுக்கான கருத்துகளின் RSS feed