2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் சன் குழும நிர்வாகி கலாநிதி மாறன் ஆகியோர் மீது சட்ட விரோத பண பரிமாற்றம் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் அ.ராசா, மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, கலைஞர் தொலைக்காட்சி இயக்குனர் சரத்குமார், பிரபல தொலைத்தொடர்பு நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் என மொத்தம்14 பேர் மீது ஸ்பெக்ட்ராம் ஊழலில் ஈடுபட்டதாக கூறி வழக்கு தொடுக்கப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது
இதில் ஆ.ராசா மட்டும் சிறையில் உள்ளார். கடந்த வாரம் ராசாவின் பதவி காலத்தில் வழங்கப்பட்ட 122 லைசென்ஸ்கள் ரத்து செய்வதாக சுப்ரீம் கோர்ட் அறிவித்தது. இதற்கிடையில் மத்திய அமலாக்க துறையினர் தி.மு.க.,வின் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் சன் குழும நிர்வாகி கலாநிதி மாறன் ஆகியோர் மீது சட்ட விரோத பண பரிமாற்றம் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது
ஏர்செல் நிறுவனத்திற்கு ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் வழங்காமல் காலம் தாமதித்தார் தயாநிதி மாறன். மலேசியாவை சேர்ந்த மாக்ஸிஸ் நிறுவனத்திற்கு ஏர்செல்லை விற்க நிர்பந்தித்தார் தயாநிதி மாறன் என்பது ஏர்செல் சிவசங்கரனின் குற்றச்சாட்டு இந்த டீலிங் நடந்து கொண்டிருந்த நேரத்தில் மாக்ஸிஸ் நிறுவனம் சன் குழுமத்தில் 550 கோடியை முதலீடு செய்தது. இது தான் இப்போது விசாரணைக்குள்ளக்கப்பட்டுள்ளது.
ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தயாநிதி மாறன் மீதான குற்றத்திற்கு ஆதாரம் இருப்பதாக சி.பி.ஐ., தெரிவித்ததையடுத்து எதிர்கட்சிகள் தயாநிதி மாறனை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தின இதனையடுத்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் 7ம் தேதி பதவி விலகினார் தயாநிதி மாறன் என்பது குறிப்பிடத்தக்கது.
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
கலாநிதி மாறன், தயாநிதி மாறன் மீது வழக்கு