திமுகவின் உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று மாலை அண்ணா அறிவாலயம், முரசொலி மாறன் அரங்கில் நடைபெறுகிறது.
தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் இக்கூட்டத்தில், தி.மு.க. அமைப்புகளுக்கான பொதுத்தேர்தல், அமைப்பு முறை தொடர்பான சட்ட திட்டத் திருத்தங்கள் மற்றும் தி.மு.க. உறுப்பினர் சேர்ப்பு, புதுப்பித்தல் குறித்து ஆலோசனை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து நாளை காலை 10 மணிக்கு திமுக பொதுக்குழு கூடுகிறது. இக்கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல், தணிக்கைக் குழு அறிக்கை குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது.
ஸ்டாலின், கனிமொழிக்கு உயர் பதவி கொடுப்பது குறித்தும் உயர் நிலை கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.
இந்நிலையில் விஜயகாந்த், தி.மு.க.வினர் மீது கொண்ட திடீர் கரிசனம் குறித்தும் பேசப்படலாம் என்று தெரிகிறது.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட, தி.மு.க., எம்.பி., கனிமொழி, டில்லி பாட்டியாலா நீதிமன்றத்தில், தவறாமல் வழக்கு விசாரணைக்கு ஆஜராகி வருகிறார்.
நாளை நடைபெறும் தி.மு.க.-வின் பொதுக்குழுவில் கலந்து கொள்ள வசதியாக கனிமொழி சி.பி.ஐ., நீதிமன்றத்தில் சிறப்பு அனுமதி பெறுவார் என்று கூறப்பட்டது. ஆனால், பிப்ரவரி 2, 3 ஆகிய நாட்களில் வழக்கு விசாரணை பாட்டியாலா நீதிமன்றத்தில் நடைபெறாது என, நீதிபதி ஓ.பி. ஷைனி உத்தரவிட்டுள்ளார்.
இதனால், சென்னையில் நடைபெறும் தி.மு.க., பொதுக் குழுவில், கனிமொழி கலந்து கொள்ள டில்லியில் இருந்து கனிமொழி நேற்றே சென்னை வந்து விட்டார்.
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
தி.மு.க.பொதுக்குழுவில் பங்கேற்கிறார் கனிமொழி!