என்னுடைய மனைவிகள் இருவரும் ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள், ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறுகிறார்கள். என்னால் தான் ஓய்வு பெற முடிய வில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
திமுகவின் பொதுக் குழு முடிந்ததும் திமுக தலைவர் கருணாநிதியை செய்தியாளர்கள் பேட்டி கண்டனர். செய்தியாளர்களின் பேட்டியின் போது ''
கேள்வி : அண்மையில் ஒரு பத்திரிகையில் ஸ்டாலின் அடுத்த தி.மு.க. தலைவராக வரவேண்டுமென்று 58 சதவிகிதம் பேர் வாக்களித்திருக்கிறார்கள். அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?
கருணாநிதி : என்னுடைய மகனுக்கு அப்படிப்பட்ட ஒரு பெருமை வந்தால் நான் அதை மறுப்பேனா?
கேள்வி : அதே சர்வேயில் குறிப்பிட்ட சத விகிதம் பேர் நீங்கள் தீவிர அரசியலிலிருந்து ஓய்வு பெற வேண்டுமென்று சொல்லி யிருக்கிறார்களே?
கருணாநிதி : அந்தப்பத்திரிகையிலே மாத்திர மல்ல - என்னுடைய மனைவிகள் இருவரும் அதைத் தான் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள், ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறுகிறார்கள். என்னால் தான் ஓய்வு பெற முடிய வில்லை '' என்று தெரிவித்தார்.
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
என்னுடைய இரு மனைவிகளும் ஓய்வு எடுக்கச் சொல்கின்றனர் - கருணாநிதி!
Comments
இப்பதிவுக்கான கருத்துகளின் RSS feed