இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: தமிழகம் கூடங்குளம் போராட்டக்காரர்களுக்கு நிதி வருவது பற்றி விசாரணை -சிதம்பரம்

கூடங்குளம் போராட்டக்காரர்களுக்கு நிதி வருவது பற்றி விசாரணை -சிதம்பரம்

கூடங்குளம் அணுமின் நிலையம் வருவதை எதிர்த்து போராட்டம் நடத்துபவர்களுக்கு எங்கிருந்து நிதி வருகிறது என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாக ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

கூடங்குளம் அணுமின் நிலையம் வருவதை எதிர்த்து கூடங்குளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமத்தைச் சார்ந்த பொதுமக்கள் தீவிரமாக போராடி வருகின்றனர். போராட்டத்தினை போராட்டக் குழுத் தலைவர் உதயகுமார் வழிநடத்தி வருகிறார். இந்நிலையில் இது சம்பந்தமாக கருத்து தெரிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் ”கூடங்குளம் அணுமின் நிலையம் விரைவில் செயல்பட வேண்டும்” எனக் கருத்துத் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், ”அணு மின் நிலையத்தை எதிர்த்து போராடுபவர்களுக்கு எவ்வாறு நிதி வருகிறது என்பது குறித்து அரசு விசாரணை நடத்தி வருவதாக” தெரிவித்துள்ளார். நிதி வருவதில் ஏதேனும் தவறிருந்தால் அல்லது கணக்குகள் முறையாக பராமரிக்கப்படாமல் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

Comments  

 
-1 # Raj 2012-02-05 19:44
We have to enquire your involvement in 2G scam also. your involvement in Fairgriwth scam. you are preaching not practising Mr Chidu
பதில் | Reply with quote | Quote
 

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)


Latest Articles: