கூடங்குளத்தில் அணுமின் நிலையம் அமைப்பது தொடர்பாக தொடர்ந்து உண்ணாவிரதம் – போராட்டம் ஆகியவை நடைபெற்று வரும் நிலையில் நேற்று சட்டசபையில் பேசிய தமிழக முதல்வர் ஜெயலலிதா, கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சினையை ஆராய்ந்து அறிக்கை அனுப்ப மாநில அரசு சார்பில் வல்லுனர் குழு அமைக்கப்படுவதாக தெரிவித்தார்.
இது குறித்து போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், “அணுமின் நிலைய பிரச்சினை குறித்து ஆராய வல்லுனர் குழுவை நியமித்த தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். எங்களின் ஜனநாயக ரீதியிலான போராட்டத்துக்கு மதிப்பளித்து வல்லுனர் குழுவை முதல்வர் நியமித்துள்ளார்.
வல்லுனர் குழுவானது அணுமின் நிலையத்தை சுற்றியுள்ள கிராமங்களுக்கு சென்று மக்களை நேரடியாக சந்திக்க வேண்டும். அப்போது மக்களின் சந்தேகங்களுக்கும், பல்வேறு கேள்விகளுக்கும் பதில் அளிக்க வேண்டும். அதன் அடிப்படையில் தயாரிக்கபப்டும் அறிக்கையினை தமிழக அரசுக்கு அனுப்ப வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்" என்றார்.
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
வல்லுநர் குழுவை வரவேற்கிறோம்: கூடங்குளம் உதயகுமார்!