கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மத்திய மந்திரி நாராயணசாமி மீது அவதூறு வழக்கு தொடருவோம் என கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் கூறியுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் திரு உதயகுமார் கூறியதாவது:-
"கூடங்குளம் பகுதி மக்களின் போராட்டம் பற்றியும், என்னை பற்றியும் மத்திய மந்திரி நாராயணசாமி தொடர்ந்து அவதூறு பரப்பி வருகிறார். என் மீது உண்மைக்கு புறம்பாக களங்கம் கற்பிக்க முயற்சிக்கிறார். எனவே அவர் மீது கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடரப்போகிறோம். அதற்காக வக்கீல்களிடம் ஆலோசித்து வருகிறோம்.
"அணுமின் நிலைய பிரச்சினை குறித்து ஆராய வல்லுனர் குழு தமிழக அரசால் நியமிக்கப் பட்டுள்ளது, இதற்க்காக,தமிழக அரசுக்கும், முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். வல்லுனர் குழுவானது அணுமின் நிலையத்தை சுற்றியுள்ள கிராமங்களுக்கு சென்று மக்களை நேரடியாக சந்திக்க வேண்டும். அப்போது மக்களின் சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் பதில் அளிக்க வேண்டும். அதன்படி அறிக்கை தயார் செய்து அரசுக்கு அனுப்ப வேண்டும்.வல்லுனர் குழுவில் போராட்டக் குழுவினரும் இருக்க வேண்டும் என விரும்புகிறோம்."
இவ்வாறு அவர் கூறினார்
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
மத்திய மந்திரிமீது அவதூறு வழக்கு:கூடங்குளம் போராட்டக் குழு
Comments
இப்பதிவுக்கான கருத்துகளின் RSS feed