கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள அணுமின் நிலையத்தில் உற்பத்தியை தொடங்கக் கூடாது என்றும்,உடனடியாக அணு உலைகளை மூட வேண்டும் என்று வலியுறுத்தியும் இடிந்தகரையில் ஆயிரக்கணக்கான மக்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
தமிழக அரசு அமைத்த வல்லுநர் குழு கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பாக உள்ளதாகவும், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாது என்றும் தெரிவித்ததைத் தொடர்ந்து, அணுமின் நிலையத்தை மூடக்கோரி நடக்கும் உண்ணாவிரதத்தை கைவிடக் கோரிய முதலமைச்சர் ஜெயலலிதாவின் கோரிக்கை போராட்டக் குழு நிராகரித்துள்ளது.
9ஆவது நாளாக நீடித்து வரும் உண்ணாவிரத்தை கைவிடுமாறு முதலமைச்சர் இன்று வேண்டுகோள் விடுத்தார். ஆனால் அவரது இந்த வேண்டுகோளை போராட்டக் குழு நிராகரித்துள்ளதோடு,கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடும் வரை எங்களது போராட்டம் தொடரும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
கூடங்குளம் விவகாரம் - ஜெயலலிதா கோரிக்கை நிராகரிப்பு
Comments
இப்பதிவுக்கான கருத்துகளின் RSS feed