கூடங்குளம் அணுமின் நிலையத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று பாளையங்கோட்டையில் நேற்று காங்கிரஸ் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஜி.கே.வாசன், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் தங்கபாலு, கிருஷ்ணசாமி, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், குமரிஅனந்தன் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பேசுகையில், “கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்க மத்திய அரசுக்கு மாநில அரசு முழு ஒத்துழைப்பு தர வேண்டும். தமிழக அரசின் ஒத்துழைப்பு கிடைத்தால் கால நிர்ணயம் செய்து குறிப்பிட்ட தேதியில் கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்படும். இதனை மத்திய அரசு அறிவிக்கும் வகையில் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
அணு உலை எதிர்ப்பாளர்களுக்கு நிதி எங்கிருந்து வருகிறது என்று ஆய்வு செய்து வருகிறோம். ஏதாவது தவறான நடவடிக்கையில் ஈடுபட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக அரசு வல்லுநர் குழுவை அமைத்து உள்ளது. அந்த அறிவிப்பை வரவேற்கிறேன் என்றார்.
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
கூடங்குளம் அணு மின்நிலையம், மாநில அரசின் ஒத்துழைப்பு தேவை :ப.சிதம்பரம்