இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: தமிழகம் காதலித்தார் மகள்; கழுத்தை வெட்டினார் தந்தை.

காதலித்தார் மகள்; கழுத்தை வெட்டினார் தந்தை.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் பொறியியல் படித்துவரும் மாணவி ஞானவள்ளி. 21 வயதாகும் இவர் மேலவளையமாதேவி கிராமத்தைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவரின் மகள். சிதம்பரத்திலுள்ள உறவினர் ஒருவர் வீட்டில் தங்கிப் படித்துவருகிறார்.

ஞானவள்ளிக்குத் திருமணம் செய்துவைக்க சுந்தரமூர்த்தி முடிவெடுத்து, அதை ஞானவள்ளியிடம் கூறியபோது, தான் ஒருவரைக் காதலித்துவருவதாக ஞானவள்ளி கூறியுள்ளார். இதனால் சுந்தரமூர்த்தி ஆத்திரமுற்றார்.

மகள் என்றும் பாராமல், கோபத்தில் சுந்தரமூர்த்தி ஞானவள்ளியில் கழுத்தில் வெட்டியுள்ளார். அதனால் காயமுற்ற ஞானவள்ளி பல்கலைகழகத்தின் அருகிலிருக்கும் ராஜா முத்தையா  மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தன்னை காவல்துறையிடம் ஒப்படைத்துக்கொண்ட சுந்தரமூர்த்தியிடம் காவல்துறை விசாரணை செய்து வருகிறது.

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)


Latest Articles: