இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: தமிழகம் விடுதலை புலிகளுக்கு உதவி: விடுதலை சிறுத்தை பிரமுகர் கைது

விடுதலை புலிகளுக்கு உதவி: விடுதலை சிறுத்தை பிரமுகர் கைது

சென்னை துறைமுகம் வழியாக, இலங்கைக்கு பல்வேறு வடிவில் ஆயுதங்கள் கடத்தப்படுவதாக, கியூ பிரிவு போலீசாருக்கு 2007ம் ஆண்டில் ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து, துறைமுகத்தில் சோதனை நடத்தினர்.

கடந்த 2007-ம் ஆண்டு சென்னை விமான நிலையம் அருகே, விடுதலைப் புலிகளுக்கு படகு உள்ளிட்ட தளவாடச்சாமான்கள் கடத்தியதாக 2 பேரை கியூ பிரிவு போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில், தங்களுக்கு வன்னியரசு என்பவர் தளவாடச்சாமான்கள் அளித்ததாக கூறினார்கள்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் வன்னியரசுவிற்கு தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு பின் விடுவிக்கப்பட்டார்.

அதன் பின், இது தொடர்பான வழக்கு, சைதாப்பேட்டை கோர்ட்டில் நடந்து வந்தது. மூன்று முறைக்கு மேல் வன்னியரசு கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்ததையடுத்து, அவருக்கு வாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. தொடர்ந்து நேற்று காலை, வன்னியரசுவை கைது செய்த கியூ பிரிவு போலீசார், சைதாப்பேட்டை 23வது கோர்ட் மாஜிஸ்திரேட் அகிலா ஷாலினி முன் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.

 

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)


Latest Articles: