இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: தமிழகம் 200 ஆண்டு பழமையான மசூதி சுவரில் மலம் பூசல்: மதுரையில் பரபரப்பு!

200 ஆண்டு பழமையான மசூதி சுவரில் மலம் பூசல்: மதுரையில் பரபரப்பு!

மசூதி சுவர்மதுரை அருகே கீழமாத்தூர் கிராமத்திலுள்ள ஒரு மசூதியின் சுவற்றில் மலம் பூசப்பட்டு, முஸ்லிம்களைக் கொச்சைப்படுத்தும் வாசகங்கள் எழுதப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மது‍ரையிலுள்ள மேலக்கால் அருகே உள்ளது கீழமாத்தூர் கிராமம். இங்கு தேவர் சமூகத்தைச் சேர்ந்த மறவர்களும், முஸ்லிம்கள் 150 குடும்பங்களும், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சிலரும் வசித்து வருகின்றனர். இவர்கள் பெரும்பாலும் விவசாயம் செய்து வருகின்றனர். நெல், வாழை, தென்னை உள்பட பயிர்கள் வைகை ஆற்றின் கரையில் பயிரிடப்பட்டு உள்ளன.

இங்குள்ள முஸ்லிம்கள் தொழுகைக்காக ஒரு மசூதி உள்ளது. இங்கு வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகை உள்பட 5 வேளை தொழுகை நடந்து வருகிறது. இந்த மசூதி சுமார் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. கடந்த சிலதினங்களுக்கு முன்பு அதாவது கடந்த 16 ஆம் தேதி பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதற்காக நடத்தப்பட்ட பட்டிமன்றத்தில் முஸ்லிம்களும், இந்துக்களும் கலந்து கொண்டனர். இதில் சொந்தமா, சொத்தா என்ற தலைப்பில் விவாதம் நடந்தது.

இந்தப் பட்டிமன்றம் நடந்த மறுநாள் இரவு (17.01.2012) சில சமூக விரோதிகள் மசூதியின் வெளிப்புற சுவரில் மனித மலத்தைப் பூசி, அதில் முஸ்லிம்களை கெட்டவார்த்தைகளால் திட்டி எழுதி வைத்துச் சென்றுள்ளனர். அடுத்தநாள் அதிகாலை தொழுகைக்காக முஸ்லிம்கள் மசூதிக்கு வந்தபோது சுவற்றில் கொச்சையாக மனித மலத்தால் எழுதப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து உடனடியாக நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.

இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு  யாரோ சிலர் மது அருந்திவிட்டு அந்த பாட்டில்களை மசூதி வாசலில் போட்டு உடைத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து கீழமாத்தூர் முஸ்லிம்களும், ஜமாத்தார்களும் நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். ஆனால் காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமல், புகாரை பெற்றுக்கொண்டதற்கான ரசீது மட்டு‍‍மே கொடுத்துள்ளனர். ஆனால் காவல்துறை ஆய்வாளர் சம்பவ இடத்துக்கு நேற்று வரை வந்து விசாரணை மேற்கொள்ளவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த முஸ்லிம்கள் நேற்று காலை அந்தப் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதற்கிடையே மதுரை மாவட்ட இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் மதுரை மாவட்ட எஸ்.பி. அஸ்ரா கார்க்கை நேரில் சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தனர். அதில், "கீழமாத்தூர் மசூதி சுவற்றில் மலத்தால் முஸ்லிம்களை கொச்சைப்படுத்தி எழுதிய சம்பவம் தொடர்பாக நாகமலை புதுக்கோட்டை காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை" என்று புகார் தெரிவித்து இருந்தனர். மேலும், "இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை உடனே கைது செய்ய வேண்டும்" என்றும் அந்த மனுவில் கூறியிருந்தனர்.

சாலை மறியல் மற்றும் முஸ்லிம் அமைப்பின் புகாரை தொடர்ந்து எஸ்.பி. உத்தரவின் பேரில், துணை போலீஸ் சூப்பிரண்டு குமார், ஆய்வாளர் பொம்மைசாமி மற்றும் காவல்துறையினர் கீழமாத்தூர் விரைந்தனர். சம்பவ இடத்தை பார்வையிட்ட அவர்கள் அங்கு பாதுகாப்பு பணிக்காக காவலர்களை 24 மணி நேரமும் கண்காணிக்க உத்தரவிட்டனர்.

ஏற்கனவே, மதுரை காஜிமார் தெருவில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இதேபோல, பன்றி தலையை மசூதியில் வைத்ததோடு மனித கழிவை மசூதி சுவற்றில் பூசியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து மதுரையில் மசூதிகளை அவமதிக்கும் செயல்கள் முஸ்லிம்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது ஏதோ ஒரு திட்டமிட்ட கலவரத்துக்கான சதி வேலைதான் என முஸ்லிம்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே மிகப்பெரிய கலவரம் ஏதும் உருவாகும் முன்பாக சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சி செய்யும் சமூகவிரோதிகள் மீது அரசு கடும் நடவடி்ககை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Comments  

 
+3 # mj 2012-01-21 09:17
YOU PUNISH THATBLACKARDS
பதில் | Reply with quote | Quote
 
 
+7 # Sikkandar 2012-01-21 09:31
They are preparing for another one gujarath.
Recent news are give alarm to us.
The police should take right decisions, otherwise common peoples are also loss the trust on them.
Every one should against sanghparivar for make peaceful human society in INDIA.
பதில் | Reply with quote | Quote
 
 
+1 # தோடகன் 2012-01-21 12:27
உடனடியாக நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.
ஆனால் காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமல், புகாரை பெற்றுக்கொண்டதற்கான ரசீது மட்டு‍‍மே கொடுத்துள்ளனர். ஆனால் காவல்துறை ஆய்வாளர் சம்பவ இடத்துக்கு நேற்று வரை வந்து விசாரணை மேற்கொள்ளவில்லை.
inuma intha kavail thuraya nambi erukiga entha nainu pathu adusu viraduga
பதில் | Reply with quote | Quote
 
 
+3 # nanmaisei 2012-01-21 12:28
இது ஒரு திட்டமிடப்பட்ட சதி வேலை,
பொது மக்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும்.
பதில் | Reply with quote | Quote
 
 
+3 # திப்பு சுல்தான் 2012-01-21 13:27
இந்துத்துவ **************** இந்த மாபாதக செயலை செய்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது......
சமுதாய சொந்தங்களே உஷார்..விழிப்போடு இருக்கங்கள் இதுபோன்ற நேரத்தில் ஆவேசப்பட்டு
உணர்சிகளுக்கு இடமளிக்கதிர்கள்.......இத்தருணத்தில் அனைத்து முஸ்லிம் அமைப்புகளும்
கருத்துவேறுபாடு மறந்து ஒன்றுகூடி சட்டப்படி நடவடிக்கை எடுப்பது அவசியம்..
முன்வருவார்களா நமது சொந்தங்கள்.......
பதில் | Reply with quote | Quote
 
 
-7 # சிரிப்புசிங்காரம் 2012-01-21 22:25
திப்பு என்ன ஏதுன்னே தெரிஞ்சுகிறதுக்கு முன்னாடியே இந்துக்கள்மீது குற்றம் சொல்லுகிற உன்னைப் போன்ற
தீவிரவாத,பயங்கரவாத முஸ்லீம் ***************** இருக்கும்போது எந்தகாலத்திலும் அமைதி ஏற்படவே ஏர்படாது...
பதில் | Reply with quote | Quote
 
 
+3 # NAZEE 2012-01-22 11:16
Quoting சிரிப்புசிங்காரம்:
திப்பு என்ன ஏதுன்னே தெரிஞ்சுகிறதுக்கு முன்னாடியே இந்துக்கள்மீது குற்றம் சொல்லுகிற உன்னைப் போன்ற
தீவிரவாத,பயங்கரவாத முஸ்லீம் ************************** இருக்கும்போது எந்தகாலத்திலும் அமைதி ஏற்படவே ஏர்படாது...


Dear Sirippu Singaram,
Tippu DID NOT BLAME HINDUS BUT THE HINDUTUVAS LIKE YOU. SO DON'T TRY TO FISHING OUT OF A TURBULENCE.
பதில் | Reply with quote | Quote
 
 
+5 # திப்பு சுல்தான் 2012-01-22 16:17
Quoting NAZEE:
Quoting சிரிப்புசிங்காரம்:
திப்பு என்ன ஏதுன்னே தெரிஞ்சுகிறதுக்கு முன்னாடியே இந்துக்கள்மீது குற்றம் சொல்லுகிற உன்னைப் போன்ற
தீவிரவாத,பயங்கரவாத முஸ்லீம் ************************** இருக்கும்போது எந்தகாலத்திலும் அமைதி ஏற்படவே ஏர்படாது...


Dear Sirippu Singaram,
Tippu DID NOT BLAME HINDUS BUT THE HINDUTUVAS LIKE YOU. SO DON'T TRY TO FISHING OUT OF A TURBULENCE.

அன்பு சகோதரா சிரிப்பு சிங்காரம் அவர்களே.......
கடந்தகாலங்களை பாருங்கள் இதுபோன்ற வழிபாட்டு தளங்களில் அநாகரிகமாக நடந்துகொண்டவர்கள் தமிழ் நாட்டில் இத்துத்துவா அமைபினர்தான்.என் தென்காசியில்
rss அலுவலகத்தில் தாங்களே குண்டுவைத்து விட்டு அதை முஸ்லிம்கள் மீது பழி சுமத்தினார்கள்..ஒரு உண்மையான முஸ்லிம் எந்த ஒரு மதத்தின் வழிபாட்டு தளங்களையும்
இதுபோன்ற அசம்பாவிதகளை செய்ததில்லை....உங்களின் கருத்தை பார்க்கும் போது''பூனை கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருட்டு'' என்று சொல்வதுபோல உள்ளது உங்களின் அறியாமையும் ..........
பதில் | Reply with quote | Quote
 
 
+4 # முஹம்மது 2012-01-22 17:09
அன்பு சகோதரா சிரிப்பு சிங்காரம் அவர்களே.......
கடந்தகாலங்களை பாருங்கள் இதுபோன்ற வழிபாட்டு தளங்களில் அநாகரிகமாக நடந்துகொண்டவர்கள் தமிழ் நாட்டில் இத்துத்துவா அமைபினர்தான்.என் தென்காசியில்
rss அலுவலகத்தில் தாங்களே குண்டுவைத்து விட்டு அதை முஸ்லிம்கள் மீது பழி சுமத்தினார்கள்..ஒரு உண்மையான முஸ்லிம் எந்த ஒரு மதத்தின் வழிபாட்டு தளங்களையும்
இதுபோன்ற அசம்பாவிதகளை செய்ததில்லை....உங்களின் கருத்தை பார்க்கும் போது''பூனை கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருட்டு'' என்று சொல்வதுபோல உள்ளது உங்களின் அறியாமையும் ..........[/quote

சகோதரரே... அன்பு சகோதரன் என்று சொல்வதை விட அன்பு நண்பன் சிரிப்பு சிங்காரம் என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறன்... மேலும் எமது சகோதரர்கள் எவ்வாறு எழுதமாட்டார்கள்.
பதில் | Reply with quote | Quote
 
 
+3 # idrees_ishak 2012-01-21 13:50
kaval turaiya? kavi turaya?
பதில் | Reply with quote | Quote
 
 
+2 # Hussain Adirai 2012-01-21 15:57
Tamil Natil muslikaluku chila idangkalil valipaatu vurimai marukapadikirathu
பதில் | Reply with quote | Quote
 
 
+2 # shahul 2012-01-21 19:07
MR ASRA KAARC PLEASE DO YOUR JOB MORE NEED TO ALERT THANKS
பதில் | Reply with quote | Quote
 
 
+2 # முஹம்மது 2012-01-22 10:12
இப்படி ஒரு கொருரமான செயலை எந்தவொரு முஸ்லிமும் செய்ய மாட்டான் அப்படி பார்த்தால் இதை முஸ்லிம் அல்லாத ஒரு மாற்று மதத்தவர்தான் செய்திருப்பார் என்பது உறுதி அதில்லாமல் சிங்காரம் தீவிரவாதமும் பயங்கரவாதமும் முஸ்லிம்கள் என்ற போர்வையில் அதையும் அவர்கள்தான் செய்கிறார்கள். எனவே யாராக இருந்தாலும் வழிபாட்டு தளங்கள் மற்றும் போது இடங்களில் இப்படியான சிருபான்மைதனமான வேலைகளை கைவிட்டுவிட்டு ஒற்றுமையாக வாழலாமே??? உனது மார்க்கம் உனக்கு எனது மார்க்கம் எனக்கு ஏன் இவ்வாறன கீழ்த்தரமான வேலையை செய்கிறீர்கள் மிருகங்கள் கூட இவ்வாறு நடந்து கொள்ளாது.
பதில் | Reply with quote | Quote
 

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)


Latest Articles: