இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: தமிழகம் கொள்ளையர் அட்டூழியம்: திருப்பூரில் பல கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளை!

கொள்ளையர் அட்டூழியம்: திருப்பூரில் பல கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளை!

கொள்ளையர்கள் அட்டூழியம்: திருப்பூரில் பல கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளை!பேங்க் ஆஃப் பரோடா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி  ஆகியவற்றில் மிகப்பெரிய அளவில் கொள்ளை சம்பவம் நடைபெற்று கொள்ளையர்கள் பற்றி எவ்வித துப்பும் கிடைக்காத  சூழ்நிலையில் நேற்று திருப்பூரில் நகைக்கடை ஒன்றில் ரூ 10 கோடியே 54 லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் - குமரன் சாலையில் உள்ள ஆலுக்காஸ் நகைக் கடையில் நேற்றிரவு ஜன்னல் வழியாக துளையிட்டு கொள்ளையர்கள் உள்ளே புகுந்துள்ளனர்.

வெல்டிங் கருவி மூலமாக கிரில் கதவுகளை உடைத்துச் சென்ற அவர்கள், கடையில் இருந்த தங்கம், வைரம், வெள்ளி நகைகளை கொள்ளையடித்துச் சென்றுவிட்டதாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளையடிக்கப்பட்ட நகைக்கடை, காவல் நிலையம் அருகில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொள்ளை சம்பவங்கள் வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் பீதியினை ஏற்படுத்தியுள்ளது.  காவல்துறைக்கு பொறுப்பேற்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதா கொள்ளை சம்பவங்களை, இரும்பு கரம் கொண்டு ஒடுக்கவேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.

 

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)


Latest Articles: