இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: தமிழகம் காவல் துணை ஆய்வாளருக்கு அடி-உதை: நால்வர் கைது

காவல் துணை ஆய்வாளருக்கு அடி-உதை: நால்வர் கைது

சென்னை மெரீனா கடற்கரையில் மதுகுடித்துக்கொண்டிருந்தவர்களை "இங்கே மது அருந்தக் கூடாது" என்று அண்ணா சதுக்கம் காவல்நிலைய சிறப்பு துணை ஆய்வாளர் கண்டித்தார். சீருடையில் இல்லாமல் இருந்த துணை ஆய்வாளரை அந்த நால்வரும் சராமரியாக அடித்து உதைத்தனர். பின்னர் காவல்துறை அலுவலர்கள் தலையிட்டு துணை ஆய்வாளரை மீட்டனர்.

அண்ணா சதுக்கம் காவல்நிலையத்தில் சிறப்புத் துணை ஆய்வாளாராகப் பணி செய்யும் முத்துராமலிங்கம் என்பவரே அவ்வாறு காவல் உலா பணி செய்து வந்த போது தாக்கப்பட்டுள்ளார். சீருடையில் இல்லாமல் சாதாரண உடையில் இருந்த முத்துராமலிங்கத்தை யாரோ என்று நினைத்து அந்த குடிகாரர்க்ள்  தாக்கியுள்ளனர். தாக்குதலில் முத்துராமலிங்கத்தின் தலை மற்றும் மார்பில் பலத்த காயம் ஏற்பட்டது.

தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறை, முத்துராமலிங்கத்தைக் குடிகாரர்களிடமிருந்து மீட்டெடுத்ததோடு, பாண்டியன், செல்வம், ரமேஷ், மார்ஷ் ஆகிய குடிகாரர்கள் நால்வரையும் கைதுசெய்துள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் தி.நகரின் உயர்தரவிடுதி ஒன்றின் பணியாளர்கள் என்று கூறப்படுகிறது.

 

Comments  

 
0 # lilly 2012-02-08 14:04
இந்த நபர்கலின் புகைபடம் நெட் ல் பொட வேன்டும்
பதில் | Reply with quote | Quote
 
 
0 # lilly 2012-02-08 14:05
இவனுங புகைப்படம் பொட வேன்டும்
பதில் | Reply with quote | Quote
 

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)


Latest Articles: