இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: தமிழகம் மு.க.அழகிரி மலேசியா பயணம்

மு.க.அழகிரி மலேசியா பயணம்

சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்ற தி.மு.க.பொதுக்குழு கூட்டத்தில் காலையில் மட்டும் கலந்துக்கொண்டு மாலை நிகழ்ச்சிகளில் பங்கேற்காத மத்திய உரத்துறை அமைச்சரும், தென் மண்டல தி.மு.க.செயலாளருமான மு.க.அழகிரி , மலேசியா புறப்பட்டு சென்றார்.

சென்னையில் இருந்து நேற்று நள்ளிரவு 12.30 மணிக்கு, மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் கோலாலம்பூர் புறப்பட்டுச் சென்றார். தனிப்பட்ட பயணமாக கோலாலம்பூர் சென்று இருக்கும் அழகிரியுடன், அவரது மனைவி உள்ளிட்ட ஆறு பேர் சென்றுள்ளனர்.

கட்சி நிர்வாக அமைப்பில் மாற்றம் செய்வது தொடர்பாக பொதுக்குழுவில் நடைபெற்ற விவாதத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ள நிலையில் மு.க.அழகிரியின் இந்த பயணம் கட்சி வட்டாரத்தில் பரபரப்பினை ஏற்படுத்தி இருக்கிறது.

 

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)


Latest Articles: