நிலமோசடி புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள சசிகலாவின் கணவர் நடராஜனின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
தஞ்சாவூரைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவர் தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் முன்னாள் தோழி சசிகலா கணவர் நடராஜன்மீது நிலமோசடி புகார் ஒன்று கொடுத்தார். இதன் அடிப்படையில் கடந்த சனிக்கிழமை தஞ்சாவூர் காவல்துறையினரால் நடராஜன் கைது செய்யப்பட்டார்.
தற்போது திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடராஜன், ஜாமீன் கோரி தஞ்சாவூர் நீதிமன்றத்தில் மனு அளித்தார். இம்மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், அவர் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது.
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
சசிகலா கணவர் நடராஜன் ஜாமீன் மனு தள்ளுபடி!