இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: தமிழகம் கே.என்.நேருவுக்கு முன் ஜாமீன்!

கே.என்.நேருவுக்கு முன் ஜாமீன்!

கே.என்.நேருவுக்கு முன் ஜாமீன்!தமிழக முன்னாள் அமைச்சரும், திருச்சி மாவட்ட தி.மு.க. செயலாளருமான  கே.என்.நேரு முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்திருந்த மனு மீது விசாரணை நடத்திய உயர்நீதிமன்ற மதுரை கிளை கே.என்.நேருவுக்கு 4 வார கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

அ.தி.மு.க.கிளைச்செயலாளர் யோகேஷ்வரனுடன் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள குத்தாலம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ கல்யாணத்தை நேற்று பார்க்க சென்ற திருச்சி மாவட்ட தி.மு.க.செயலாளரும், தமிழக முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு மற்றும் திருவாரூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் பூண்டி கலைவாணன் ஆகியோர் உள்ளிட்ட ஐந்து நபர்கள் மீது, சிறையில் துணை வார்டன் வீரமணியைத் தாக்கியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இவ்வழக்கு தொடர்பாக கே.என்.நேரு வீடு, அலுவலத்தில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் கே.என்.நேருவுக்கு முன் ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கு தொடர்பாக பூண்டி கலைவாணன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)


Latest Articles: