ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பதிவுத் திருமணம் செய்துக் கொண்ட புதுமணத் தம்பதிகள் காவல்துறையினரிடம் பாதுகாப்பு கோரி மனு அளித்துள்ளனர்.
ராமநாதபுரம் மாரியூரை சேர்ந்தவர் பரூக் அப்துல்லா. இவர் சிங்கப்பூரில் உணவகம் நடத்தி வருகிறார். இவரது மகள் காதர் அலி பீவி . இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த ஹக்கீம் ஹைதர் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
இந்நிலையில், காதர் அலி பீவியின் மாமா அப்துல் சலாம், இந்தத் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார். தனது உறவினரின் மகனை, காதர் அலி பீவிக்கு மணம் முடித்து வைக்க விரும்பினார். இதற்கு காதர் அலி பீவியின் பெற்றோரும் சம்மதம் தெரிவித்துள்ளனர். ஆனால் காதர் அலிபீவிக்கு அப்துல் சலாமின் உறவினர் மகனை திருமணம் செய்ய விருப்பமில்லை.
இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 19ம் தேதி இந்தியா வந்த காதர் அலி பீவி, பெரியகுளம் சார்பதிவாளர் அலுவலகத்தில், ஹக்கீம் ஹைதரை பதிவுத் திருமணம் செய்து கொண்டார். பின், அவர் ராமநாதபுரம் எஸ்.பி. அலுவலகத்தில் தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
புதுமணத்தம்பதிகள் காவல்துறையின் பாதுகாப்பினைக் கோரி இருப்பது அப்பகுதியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
பாதுகாப்பு வேண்டும்: புதுமணத்தம்பதிகள் காவல்துறையிடம் கோரிக்கை