இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: தமிழகம் புதிய அரசியல் - புதிய நம்பிக்கை: டாக்டர் ராமதாஸ் விருப்பம்

புதிய அரசியல் - புதிய நம்பிக்கை: டாக்டர் ராமதாஸ் விருப்பம்

பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் புதிய அரசியல், புதிய நம்பிக்கை என்ற தலைப்பில் கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் சில பகுதிகளில் கூட்டங்கள் நடத்தப்பட்டது.  கட்சியின் இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இக்கூட்டங்களில் கலந்துக்கொண்டார்.

பா.ம.க. சார்பில் புதிய அரசியல், புதிய நம்பிக்கை என்ற செயல் திட்ட விளக்க அறிக்கை இன்று சென்னையில்  வெளியிடப்பட்டது. கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட மாநில தலைவர் ஜி.கே. மணி பெற்றுக் கொண்டார்.

பின்னர்  பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்  செய்தியாளர்களிடம் பேசுகையில், "வேளாண்மை, தொழில் வளர்ச்சி, வேலை வாய்ப்பு, கட்டமைப்பு மேம்பாடு, சமூக நீதி, கல்வி, கிராமப்புற மேம்பாடு, சுற்றுச்சூழல், நல்ல ஆளுகை, பண்பாட்டு வளர்ச்சி, உள்ளிட்ட செயல் திட்டங்களை புதிய நம்பிக்கையுடன் வகுத்துள்ளோம்

தமிழ்நாட்டு அரசியலில் மிகப்பெரிய மாற்றம் தேவைப்படுகிறது.  பொதுநலனில் உண்மையான அக்கறை கொண்டவர்கள் அரசியலுக்கு வரவேண்டும். புதிய தமிழ்நாட்டை கட்டமைக்கும் வகையில் இந்த ஆவணத்தை தயாரித்துள்ளோம். இதுபற்றி அனைத்து தரப்பினரும் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம். அதன் பிறகு இறுதி அறிக்கை தயாரித்து வெளியிடுவோம்.

தனித்தே தேர்தலை சந்திக்க முடிவு செய்துள்ளோம். தேசிய கட்சியுடனோ, திராவிட கட்சிகளுடனோ இனிமேல் கூட்டணி கிடையாது.

தமிழ் உள்பட 22 மொழிகளும் தேசிய மொழியாக்கப்பட வேண்டும், கச்சத்தீவை திரும்ப பெறவேண்டும். முல்லைப் பெரியாறு, காவிரி, பாலாறு நீர்வளத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்றார்.

Comments  

 
0 # N.S.M. Shahul Hameed 2012-02-01 17:41
கற்பனையில் வாழும் பா.ம.க.


கூட்டணியும் சீட்டுகளும் கண்டு - வீண்
கற்பனையிலே மயக்கம் கொண்டு (ரிப்பீட்டு)

அதை தனக்கு தனக்கு என
விதைக்கும் கலையறிந்து
சுவைக்கும் களைகள் அறிவோம்!

இதை நினைத்து நினைத்து தினம்
கதைக்கும் வழியறிந்து
வதைக்கும் கதைகள் புரிவோம்!

ஓஹோஹோ ஓஹோஹோ பாமக .. அமுக ..இமுக .. ... ஐமுக
அப்படியே தமிழகத்தை அஃமுக !
பதில் | Reply with quote | Quote
 
 
+1 # ismail 2012-02-05 11:19
கற்பனையில் வாழும் பா.ம.க.
பதில் | Reply with quote | Quote
 

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)


Latest Articles: