இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: தமிழகம் முன்னாள் அமைச்சர் பொன்முடியின் நிறுவனத்தில் சோதனை

முன்னாள் அமைச்சர் பொன்முடியின் நிறுவனத்தில் சோதனை

முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மனைவி விஷாலாட்சி பெயரில்,  பொன்முடிக்கு சொந்தமான, "விஷால் இருசக்கர வாகன முகமை" கடலூர் செல்லாங்குப்பத்தில் இருக்கிறது.

இன்று காலை முதல் பொன்முடிக்கு சொந்தமான விஷால் இருசக்கர வாகன முகமையில் சோதனை நடத்தப்பட்டது.

விழுப்புரம் மாவட்ட கையூட்டு ஒழிப்பு துணைக் கண்காணிப்பாளர் கன்னியப்பன் தலைமையில் ஆய்வு நடந்தது.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், நில அபகரிப்பு செய்ததாகவும் முன்னாள் அமைச்சர் பொன்முடி மீது கையூட்டு ஒழிப்புத் துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

கட்டத்தின் மதிப்பு, இடம் பற்றி.  கடலூர் நகர நிலஅளவை அதிகாரி சுரேஷ், வருவாய் ஆய்வாளர் சத்தியம் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு நடத்தினார்கள்.
இச்சோதனை காலை 11.30 மணிக்கு தொடங்கி, மதியம் 3.30 மணிக்கு முடிவடைந்தது.

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)


Latest Articles: