திமுகவின் தென் மண்டல அமைப்புச் செயலாளரும் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி தமது 61 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.
மு.க.அழகிரியின் பிறந்தநாள் விழாவில் 16661 ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப் பட்டது. பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி, ஜனாதிபதி பிரதீபா பாட்டில் உள்ளிட்ட பல தலைவர்களும் அழகிரிக்கு போனில் வாழ்த்து தெரிவித்த நிலையில் அழகிரிக்கு நெருக்கமானவர் எனக் கருதப் பட்ட பொட்டு சுரேஷ் அழகிரியின் பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் பங்கேற்க வில்லை.
தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்குப் பின்னர் மதுரையில் பொட்டு சுரேஷ், அட்டாக் பாண்டி, எஸ்ஸார் கோபி என பலரும் கைது செய்யப் பட்டனர். அழகிரியும் பொட்டு சுரேஷ் உள்ளிட்ட கைது செய்யப் பட்ட அனைவரையும் சிறையில் சென்று சந்தித்தும் வந்தார். அட்டாக் பாண்டி, எஸ்ஸார் கோபி ஆகியோர் அழகிரி பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டது குறிப்பிடத் தக்கது.
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
அழகிரி பிறந்த நாள் விழாவில் பங்கேற்காத பொட்டு சுரேஷ்!