தொடர் மின்வெட்டுக்கு தமிழக அரசு விரைந்து தீர்வு காணாவிட்டால் மின்கம்பிகளில் துணி காயவைப்போம் என்று தமிழக அரசின் மண்டை காயவைத்துள்ளது பாட்டாளி மக்கள் கட்சியின் கரூர் மாவட்டக் கிளை.
தமிழகத்தில் நிலவும் கடும் மின்வெட்டைக் கண்டித்து, மின் கம்பிகளில் துணி காய வைக்கும் போராட்டத்தை நடத்தப் போவதாக கரூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி அறிவித்துள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் பாஸ்கரன் இது தொடர்பாக
" தொடர் மின்வெட்டினால், மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். தொழிலகங்கள் யாவும் முடங்கியுள்ளன.
பேருந்து, பால் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகள் விலை உயர்த்தப்பட்டுள்ள நிலையில், தொடர் மின்வெட்டினாலும் மக்கள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்
தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து இதற்கு தீர்வு காண வேண்டும், இல்லையெனில் கட்சி நிறுவனர் ராமதாஸ் அவர்களின் அனுமதிப் பெற்று, கரூர் மின்வாரிய அலுவலகத்தில் உள்ள மின்கம்பிகளில் துணிகாய வைக்கும் போராட்டம் நடத்தப்படும்
என்று கூறியுள்ளார்.
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
"மின்கம்பிகளில் துணி காயவைப்போம்"
Comments
இப்பதிவுக்கான கருத்துகளின் RSS feed