பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், "புதிய அரசியல், புதிய நம்பிக்கை" என்ற வரைவு ஆவணக் கொள்கைத் திட்டவிளக்க புத்தகங்களை தமிழகத்தின் முக்கிய நகரங்களான சென்னை, கோவை, மதுரை ஆகிய இடங்களில் வெளியிட்டார்.
இனிவரும் காலங்களில் பாமக எடுக்கும் புதிய பாதை குறித்த அத்தனைத் தகவல்களும் அந்தத் திட்ட அறிக்கையில் இருக்கும் என்று கூறப்படுகிறது.
திருச்சியில் "புதிய அரசியல், புதிய நம்பிக்கை" என்ற வரைவு ஆவணக் கொள்கைத் திட்ட விளக்க புத்தகங்களை வெளியிட்ட பின்னர் பேசிய அவர், "சென்னை நிருபர்கள் மிகவும் மோசம். சின்ன சின்ன பசங்க நிருபர் என்று கேள்வி கேட்க வந்துவிடுகிறார்கள். தினந்தோறும் செய்தித்தாள்களை படிக்காமல் கேள்வி கேட்கிறார்கள். அரசியலைப் பற்றி முழுமையாக தெரியாமல், நிருபராக இருக்கிறார்கள்" என்று கடுகடுத்தார்.
பிறகு திருச்சி செய்தியாளர்கள் பற்றி பேசிய அவர், "நீங்களெல்லாம் மூத்தவர்கள், அரசியல் – நாட்டு நடப்புகளை தெரிந்தவர்களாக இருக்கிறீர்கள், கேள்விகளும் சிறப்பாக கேட்கிறீர்கள்" என்று புகழாரம் சூட்டினார்.
பின்னர் "பத்திரிகையாளர்களாகிய உங்களுக்கும் இந்த புத்தகத்தை கொடுக்கிறோம். தனிப்பட்ட முறையில் உங்களுக்கு அரசியலைப் பற்றிய ஒரு கருத்து இருக்கும். அதனை இந்த புத்தகத்தில் கடைசிப் பக்கத்தில் கருத்து கேட்பு படிவம் என்ற பகுதி இருக்கிறது. உங்களின் கருத்துக்களை அதில் முழுமையாக எழுதி அனுப்பவும். தாங்கள் கூறும் கருத்து பாதுகாக்கப்படும்" என்றார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், "பாட்டாளி மக்கள் கட்சி துவங்கியது யாருடனும் கூட்டணி சேராமல் தனித்து போட்டியிட்டிருந்தால், பா.ம.க., இன்று ஆளுங்கட்சியாகவோ அல்லது, 50 முதல் 60 எம்.எல்.ஏ.,க்களை கொண்ட எதிர்க்கட்சியாகவோ இருந்திருக்கும். எனவே இனி வரும் அனைத்து தேர்தல்களிலும், பா.ம.க., தனித்தே போட்டியிடும்" என்றார்.
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
சென்னை நிருபர்கள் - சின்ன பசங்க:ராமதாஸ் கோபம்!
Comments
மதியுடன் பரப்புரை பதியும் பாமகவை
விதியோ ருறவெனும் சதியில் புகுத்தியெமை
மிதிக்கா மலிருக்கத் துதி!
- மதுக்கூர் என்.எஸ்.எம்,ஷாகுல் ஹமீது
iராமதாஸ் போன்ற கடைந்தெடுத்த சந்தர்ப்ப அரசியல்வாதிகள் மக்களால் முற்றாக புறக்கணிக்கப்படவேண்டும்.
இப்பதிவுக்கான கருத்துகளின் RSS feed