இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: தமிழகம் ராவணனுக்கு 2 நாள் போலீஸ் விசாரணை!

ராவணனுக்கு 2 நாள் போலீஸ் விசாரணை!

ராவணனுக்கு 2 நாள் போலீஸ் விசாரணை!ரூபாய் 1 கோடி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவின் உறவினர் ராவணனை இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

10 லட்சம் ரூபாய் மோசடி புகாரின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த ராவணன்மீது, 1 கோடி ரூபாய் மோசடி புகார் ஒன்று தெரிவிக்கப்பட்டதையடுத்து சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கில் 5 நாட்கள் காவல்துறையின் கஸ்டடியில் அவரை விசாரிக்க அனுமதிகோரி காவல்துறை ஆலந்தூர் நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தது.

இம்மனுவைவிசாரித்த நீதிபதி ராவணனை 2 நாட்கள் காவல்துறை கட்டுப்பாட்டில் எடுத்து விசாரிக்க அனுமதியளித்து உத்தரவிட்டார். இதற்கிடையில் இவ்வழக்கில் ராவணன் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனுவினை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)


Latest Articles: