சென்னை அருகேயுள்ள மாடம்பாக்கத்தை சேர்ந்தவர் பைசல். வெளிநாட்டில் கார் டிரைவராக வேலை பார்த்து நாடு திரும்பியவர். இவருடைய மனைவி ரீமா. இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இவருடைய மகளுக்கு அடுத்த மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தார்.
ரூ.15 லட்சம், மற்றும் 40 பவுன் நகையையும் வீட்டில் பீரோவில் வைக்காமல் பரண்மேல் பாதுகாப்பாக வைத்து இருந்தார்.
நேற்று முன்தினம் வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற உறவினர் திருமணத்தில் கலந்து கொள்ள பைசல், ரீமா மற்றும் குடும்பத்தினர்கள் சென்றனர்.
திருமணம் முடிந்து வீடு திரும்பிய போது வீட்டின் பின் பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டனர்.
கதவை உடைத்து வீட்டினுள் நுழைந்த கொள்ளையர்கள் பீரோக்களில் பணம் இல்லாததால், பல இடங்களில் தேடி பார்த்த பின்னர் இறுதியில் பரண்மேல் வைத்திருந்த ரூ.15 லட்சத்தை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. ஆனால் அதன் அருகே இருந்த நகைகளை கொள்ளையர்கள் கவனிக்கவில்லை. இதனால் அந்த நகைகள் கொள்ளை போகாமல் தப்பியது.
சேலையூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாய் ராணி, சம்பவ இடத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரம் ஓடி நின்று விட்டது.. காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.
பணத்தை கொள்ளையடித்த கொள்ளையர்கள் வீட்டின் ஒவ்வொரு அறை முன்பும் எலுமிச்சை பழத்தை அறுத்து அதில் குங்குமம் தடவி வைத்திருந்தனர். கற்பூரம், கறுப்பு கயிறுகளும் கிடந்தன. கொள்ளையர்கள் போலீசாரின் கவனத்தை திசை திருப்பவும், கொள்ளை நடந்த வீட்டில் இருப்பவர்களிடம் பயத்தை (?!) ஏற்படுத்தவும் குங்குமம் தடவி எலுமிச்சை பழத்தை போட்டு சென்றுள்ளனர்.
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
ரூ 15 லட்சம் கொள்ளை: திசை திருப்ப கற்பூரம், கருப்பு கயிர், குங்குமம் தடவிய எலுமிச்சை பழம்..?!
Comments
(திருடனோ திருடியோ அவர்கள் சம்பாதித்த பாவத்திற்கு, இறைவனிடமிருந்துள்ள தண்டனையாக அவர்களின் கரங்களைத் தரித்து விடுங்கள். இறைவன் மிகைத்தவனும், ஞானம் மிக்கோனுமாக இருக்கின்றான்) அருள்மறை திருக்குர்ஆன் 5:38
இப்பதிவுக்கான கருத்துகளின் RSS feed