சங்கரன்கோவில் தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், வேட்பாளரை முதன் முதலில் அறிவித்து தேர்தல் களத்தில் அதிரடியாக நுழைந்திருக்கும் அ.தி.மு.க. இப்போது தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர் பட்டியலையும் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா இன்று விடுத்துள்ள அறிக்கையில் தமிழக அமைச்சர்கள் 26 பேர் உள்ளிட்ட 34 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு நிர்வாகிகளின் பட்டியலை அறிவித்துள்ளார்
ஓ. பன்னீர்செல்வம், செங்கோட்டையன், நத்தம் விசுவநாதன், கே.பி. முனுசாமி, வைத்திலிங்கம், பா. வளர்மதி, சி.வி. சண்முகம், தாமோதரன், செல்லூர் ராஜூ, பச்சைமால், எடப்பாடி பழனிசாமி, ஆர். காமராஜ், எம்.சி. சம்பத், கே.வி. ராமலிங்கம், சின்னையா, பி.தங்கமணி, எஸ். சுந்தரராஜ், செந்தூர்பாண்டியன், கோகுல இந்திரா,
பி.வி. ரமணா, ந. சுப்பிரமணியன், வி. செந்தில்பாலாஜி, என்.ஆர். சிவபதி, ராஜேந்திர பாலாஜி, செல்லப்பாண்டியன், டாக்டர். விஜய் உள்ளிட்ட அமைச்சர்களும்
நெல்லை புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ஆர். முருகையா பாண்டியன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றத் தலைவர் பி.எச். பாண்டியன், அதிமுக தேர்தல் பிரிவுச் செயலாளர் பொள்ளாச்சி வ. ஜெயராமன் எம்.எல்.ஏ., அண்ணா தொழிற்சங்கப் பேரவை செயலாளர் சின்னசாமி எம்.எல்.ஏ., அதிமுக மாணவர் அணிச் செயலாளர் எஸ். சரவணபெருமாள்,
அதிமுக சிறுபான்மையினர் நலப்பிரிவுச் செயலாளர் அன்வர்ராஜா, ஜெயலலிதா பேரவைச் செயலாளர் டி.ஆர். அன்பழகன், அதிமுக. கழக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை இணைச் செயலாளர் ராஜலட்சுமி எம்.எல்.ஏ. ஆகிய கட்சி நிர்வாகிகள் கொண்ட 34 நபர்கள் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்," என்று ஜெயலலிதா அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அடுத்தடுத்த அறிவிப்புகளால் சங்கரன்கோவில் தொகுதியில் இப்போதே பரபரப்பு தொடங்கியுள்ளது.
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
சங்கரன்கோவில் இடைத்தேர்தல்: அமைச்சர் பட்டாளம் குவிப்பு!