சங்கரன்கோவில் தொகுதியில் அடுத்த மாதம் 18ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க., தி.மு.க., தே.மு.தி.க. ம.தி.மு.க ஆகிய கட்சிகள் தங்களது வேட்பாளரை அறிவித்துள்ளது. பாரதிய ஜனதா கட்சியும் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளது.
அ.தி.மு.க.சார்பில் 32 அமைச்சர்கள் உள்ளிட்ட 43 பேர் அடங்கிய தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் திமுக தலைவர் கருணாநிதி மார்ச் 15-ம் தேதி பிரசாரம் மேற்கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திமுக தலைமைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், 27-ம் தேதி வேட்பு மனுதாக்கல் நடைபெறுகிறது. மார்ச் 5 மற்றும் 6-ம் தேதிகளில் திமுக வேட்பாளர் ஜஹஹர் சூரியக்குமாரை ஆதரித்து பொதுச்செயலர் அன்பழகன் பிரசாரம் மேற்கொள்வார். மு.க.ஸ்டாலின் 12,13 மற்றும் 14-ம் தேதிகளிலும், கருணாநிதி 15-ம் தேதியும் பிரசாரம் மேற்கொள்ள உள்ளனர்.
சங்கரன்கோவில் இடைத்தேர்தல் பணிகள் கட்சியின் தென்மண்டல அமைப்புச் செயலர் அழகிரி தலைமையில் நடைபெறும் . இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
சங்கரன்கோவில் இடைத்தேர்தல் பிரசாரத்தில் கருணாநிதி