சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த அமைச்சர் செ.கருப்பசாமி மரணமடைந்ததால் அங்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது.
இடைத்தேர்தல் தேதியினை இதுவரை தலைமை தேர்தல் ஆணையம் அறிவிக்கவில்லை.
இந்நிலையில்கடந்தவாரம் அதிமுகவும் தேமுதிகவும் சட்டபையில் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுப்பட்டன. அப்போது முதல்வர் ஜெயலலிதா துணிவிருந்தால்
சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற முடியுமா? என்று கேள்வி எழுப்பினார்
இதனையடுத்து சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் தேமுதிக மற்றும் அதிமுகவுக்கு இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தான் விட்ட சவாலில் ஜெயிக்க முதல்வர் ஜெயலலிதா இடைத்தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே அங்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டதாகத் கூறப்படுகிறது.
சங்கரன்கோவில், மேலநீலிதநல்லூர், குருவிகுளம் ஆகிய இடங்களில் நலத்திட்ட உதவிகள் முடக்கி விடப்பட்டுள்ளன. மேலும் ஜெயலலிதா பங்கேற்க உள்ள கூட்டத்துக்கான இடத்தை அமைச்சர்கள் நேரில் ஆய்வு செய்தனர். அமைச்சர்கள் செங்கோட்டையன், செந்தூர்பாண்டியன் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
சங்கரன்கோவில் செல்கிறார் ஜெயலலிதா..?!