இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: தமிழகம் சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு?: ஜான்பாண்டியன்

சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு?: ஜான்பாண்டியன்

சங்கரன்கோவில் தொகுதியில் அடுத்தம் மாதம் 18ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. அ.தி.மு.க., தி.மு.க., ம.தி.மு.க. ஆகிய கட்சிகள் தங்களது வேட்பாளரை அறிவித்து தேர்தல் களத்தில் தீவிரமாக பணியாற்றி வருகின்றன.

இந்நிலையில் தமிழக மக்கள் முன்னேற்றக்கழக தலைவர் ஜான்பாண்டியன் சங்கரன்கோவிலில்  செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்  “இந்த இடைத்தேர்தலில் தமிழக எதிர்க்கட்சிகள் சார்பில் ஆளும் அதிமுகவை எதிர்ப்பதற்கு பொது வேட்பாளரை நிறுத்தவும் நாங்கள் தயார்.  . 

பரமக்குடி துப்பாக்கிச்சூட்டுக்கு காரணமான காவல்துறை அதிகாரிகளை பணி நீக்கம் செய்துவிட்டு அவர்கள் மீது கொலைமுயற்சி வழக்குப்பதிவு  செய்யவேண்டும்  உள்ளிட்ட ஐந்து கோரிக்கைகள் உள்ளன இவற்றை அ.தி.முக. ஏற்றுக்கொண்டால் அக்கட்சியுடன் நாங்கள் கூட்டணி பேசுவதற்கு தயார் என்றார்

தொடர்ந்து அவர் பேசுகையில், “டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையிலான புதிய தமிழகம் எங்கள் கட்சியின் ஆதரவை கேட்டால் அவர்களோடு நாங்கள் இணைந்து செயலாற்றுவோம்

மேலும் கூட்டணி அமையாத சூழ்நிலையில், எங்கள் கட்சியின் சார்பில் வேட்பாளரை நிறுத்த உள்ளோம்.   இது தொடர்பாக வருகின்ற 25ம் தேதி நடைபெறும் எங்களின் கட்சியின் பொதுக்குழுவில் விவாதித்து முடிவெடுப்போம் என்றார்

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)


Latest Articles: