இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: தமிழகம் தமிழக அமைச்சரவையே சங்கரன்கோவிலில் முகாம்

தமிழக அமைச்சரவையே சங்கரன்கோவிலில் முகாம்

தமிழக அமைச்சராக இருந்த செ.கருப்பசாமி உடல்நலக்குறைவால் மரணமடைந்தார் இதனையொட்டி, சங்கரன்கோவில் தொகுதியில் அடுத்த  மாதம் 18 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அ.தி.மு.க.சார்பில் முத்துசெல்வி போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டு தேர்தல் களத்தில், தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னதாகவே களத்தில் இறங்கிய அ.தி.மு.க. முதல்கட்டமாக 26 அமைச்சர்களை தேர்தல் பணியில் நியமித்தது.

தற்போது  மேலும்  முஹம்மதுஜான், பி.பழனியப்பன், வி.மூர்த்தி, கே.ஏ.ஜெயபால், முக்கூர் என்.சுப்பிரமணியன், எம்எஸ்எம் ஆனந்தன் ஆகிய அமைச்சர்களையும் தேர்தல் பணிக்குழுவில் நியமித்துள்ளது.

இதன் மூலம் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் அமைச்சர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. தேர்தல் பணிக்குழுவில் ஏற்கனவே 34 பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இப்போது எம்.பிக்கள் செம்மலை, தம்பிதுரை உள்ளிட்டோர்களும் நியமிக்கப்பட்டுள்ளதன் மூலம் தேர்தல் பொறுப்பாளர்கள் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது.

இடைத்தேர்தலில் மும்முனைப் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேமுதிக தனது வேட்பாளரை அறிவித்ததால் நான்கு முனை போட்டி என்ற நிலையில் பரபரப்பு ஒவ்வொரு நாளும் கூடி வருகிறது.

ஒரு தொகுதியின் இடைத்தேர்தலுக்காக 32 அமைச்சர்கள் உள்ளிட்ட 43  பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.

Comments  

 
+2 # madhivanan,kuwait 2012-02-21 00:18
Let the State's economy go to dogs because of power cut.Let there be bank robberies.Byelection is important.Only for this purpose we have 32 ministers. Hail democracy.Jai Dinamani,Dinamalar,Kumudam Reporter,Junior Vikadan and Thuqlak.Better print Byelection special.
பதில் | Reply with quote | Quote
 

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)


Latest Articles: