இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: தமிழகம் "டாக்டர் நமது எம்.ஜி.ஆர்" நாளிதழ் பொறுப்பில் இருந்தும் சசிகலா நீக்கம்!

"டாக்டர் நமது எம்.ஜி.ஆர்" நாளிதழ் பொறுப்பில் இருந்தும் சசிகலா நீக்கம்!

அதிமுகவின் அதிகாரப் பூர்வ நாளேடான நமது எம்.ஜி.ஆர் நாளிதழின் வெளியீட்டாளர் பொறுப்பில் இருந்து வந்தார் சசிகலா.

கடந்த மாதம் அதிமுகவில் இருந்து சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் நீக்கப் பட்ட பிறகு இப்பொறுப்பில் இருந்தும் விரைவில் நீக்கப் படுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில் சட்டப் படி நிறைவேற்றப் பட வேண்டிய சில காரியங்கள் முடிக்கப் பட்டப் பிறகு அப்பொறுப்பில் இருந்து சசிகலா நீக்கப் பட்டுள்ளார்.

நமது எம்.ஜி.ஆர் நாளிதழின் புதிய வெளியீட்டாளராக ஜெயலலிதாவின் உதவியாளர் எஸ்.எஸ்.பூங்குன்றன் நியமிக்கப் பட்டுள்ளார்.  நமது எம்.ஜி.ஆர் நாளிதழின் ஆசிரியர் பி.ஆர்.சண்முகமும் நீக்கப் பட்டு புதிய ஆசிரியராக அழகுராஜ் நியமிக்கப் பட்டுள்ளார்.

 

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)


Latest Articles: