இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: தமிழகம் தொடங்கியது கைது படலம் - சசியின் நெருங்கிய உறவினர் கைது!

தொடங்கியது கைது படலம் - சசியின் நெருங்கிய உறவினர் கைது!

தொடங்கியது கைது படலம் - சசியின் நெருகிய உறவினர் கைது!சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் அதிமுகவில் இருந்து வெளியேற்றப் பட்ட பின்னர் சசிகலாவின் ஆதரவு அமைச்சர்கள் எனக் கருதப் பட்ட வேலுமணி மற்றும் அக்னி கிருஷ்ணமூர்த்திக்கு கல்தா கொடுக்கப் பட்டது.

இந்நிலையில் சசிகலா தரப்பை மேலும் பயமுறுத்தும் விதமாக சசிகலாவின் சித்தப்பா மருமகனான ராவணன் மற்றும் அவரது உதவியாளர் மோகன் கைது செய்யப் பட்டுள்ளனர்.

மேட்டுப் பாளையத்தைச் சேர்ந்த ஒப்பந்தக் காரர் ரவிக் குமார் அக்டோபர் 9 ம் தேதி தம்மைக் ராவணனின் உதவியாளர் மோகன் கடத்திச் சென்று கோவையில் உள்ள ஆயில் குடோனில் அடைத்து வைத்து அரசு ஒப்பந்தகளைப் பெற்றதற்காக  ரூ 10 லட்சம் தந்தால் தான் விடுவிப்போம் என்று கூறி மிரட்டியதாகவும் தம் நண்பர் ரூ 10 லட்சம் கொடுத்து தம்மை மீட்டதாகவும் கோவை மாவட்ட ஊரக காவல்துறைக் கண்காணிப்பாளர் உமாவிடம் புகார் கொடுத்துள்ளார்.

இந்த குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே  ராவணன் கைது செய்யப் பட்டுள்ளதாகத் தெரிகிறது.  ராவணன் கைது செய்யப் பட்டுள்ளதை கோவை மாவட்ட ஊரகக் கண்காணிப்பாளர் உமாவும் அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளார்.

 

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)


Latest Articles: