தமிழகத்தில் அ.தி.மு.க.ஆட்சி அமைந்த பின்னர் தமிழக முதல்வரும், ஸ்ரீரங்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஜெயலலிதா, கடந்த ஜூன் மாதம் ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்று பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைத்தும், ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கியிருந்தார்.
இதன் தொடர்ச்சியாக வருகிற 13ந் தேதி முதலமைச்சர் ஜெயலலிதா தமது சொந்த தொகுதியான ஸ்ரீரங்கத்துக்கு 2வது முறையாக செல்கிறார்
இது குறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு: தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா 3வது முறையாக தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன் தன்னை தேர்ந்தெடுத்த ஸ்ரீரங்கம் தொகுதி வாக்காளப் பெருமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு தொகுதி முழுவதும் கடந்த ஜூன் மாதம் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
அத்துடன் 19.6.2011 அன்று ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்டு பக்தர்களுக்கான தங்கம் பகுதி, புதிய துணை மின் நிலையங்கள், புதிய மகளிர் தோட்டக்கலைக்கல்லூரி உள்பட 190 கோடிக்கும் மேலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வைத்து ஏழை எளிய மக்களுக்கு அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
இதன் தொடர்ச்சியாக ஸ்ரீரங்கம் சட்டமன்றம் தொகுதியில் முடிவுற்ற திட்டங்களை துவக்கி வைக்கவும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும், ஏழை எளிய மக்களுக்கு அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கவும் 13.2.2012 அன்று ஸ்ரீரங்கம் சென்று அங்கு நடைபெறவிருக்கும் அரசு விழாவில் கலந்து கொள்கிறார். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
முதல்வர் ஜெயலலிதா இம்மாதம் ஸ்ரீரங்கம் பயணம்