இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: தமிழகம் ஏனாம் கலவரம்: புதுச்சேரியில் இன்று முழு அடைப்பு!

ஏனாம் கலவரம்: புதுச்சேரியில் இன்று முழு அடைப்பு!

ஏனாம் கலவரம்: புதுச்சேரியில் இன்று முழு அடைப்பு!புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த ஏனாம் பகுதியிலுள்ள ரீஜினல் செராமிக் நிறுவனத்தில் 1200 தற்காலிக ஊழியர்கள் பணி நிரந்தரம் கோரி கடந்த ஒரு ஆண்டாக தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

போராட்டத்தை நடத்திய தொழிலாளர்களின் சங்க நிர்வாகி முரளி மோகன் அங்குள்ள காவல் நிலையத்தில் மர்மமான முறையில் இறந்து போனார். அவரைக் காவல்துறையினர் அடித்து கொன்றுவிட்டதாக கூறி தொழிலாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர்.

இந்த கலவரம் குறித்து உயர்நீதிமன்ற நீதிபதியைக்‍ கொண்டு நீதி விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி, அனைத்துத் தொழிற்சங்கங்கள் சார்பில் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அதன்படி, இன்று காலை தொடங்கிய பந்த் காரணமாக, புதுச்சேரியில் தனியார் பேருந்துகள் இயக்‍கப்படவில்லை. நேற்றிரவு இரு தனியார் பேருந்து, மற்றும் ஒரு அரசு பேருந்து கல்வீசி தாக்கப்பட்டது

காவல்துறை பாதுகாப்புடன் அரசுப் பேருந்துகள் குறைந்த அளவில் இயக்‍கப்படுகின்றன. கடைகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது.

அத்துடன், தனியார் பள்ளிகளுக்‍கு விடுமுறை அளிக்‍கப்பட்டுள்ளது. முழு அடைப்பு காரணமாக மக்‍களின் இயல்பு வாழ்க்‍கை பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாக 61 பேர் கைது செய்யப்பட்டனர்.

 

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)


Latest Articles: