மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களிடம், 30.12.2011 அன்று தமிழகத்தை தாக்கிய ‘தானே’ புயலால் பாதிக்கப்பட்டுள்ள கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இன்று (1.2.2012) தலைமைச் செயலகத்தில் கீழ்க்கண்டவர்கள் நிதியுதவி வழங்கினார்கள்.
1. மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவர் திரு. டி. ஜெயக்குமார், மாண்புமிகு சட்டப்பேரவை துணைத் தலைவர் திரு. டி. தனபால், அரசு கொறடா திரு. பி. மோகன் ஆகியோர் அ.இ.அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியம் - 57 லட்சத்து 2 ஆயிரம் ரூபாய்.
2. மாண்புமிகு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் திரு. ஏ. வைத்தியலிங்கம் அவர்கள் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், தமிழ்நாடு குடிசைமாற்று வாரியம், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம், தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி சங்கம் ஆகியவற்றின் பணியாளர்கள் சார்பாக 26 லட்சத்து 71 ஆயிரத்து 638 ரூபாய்.
3. மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திருமதி. கே.டி. பச்சமால் அவர்கள் தமிழ்நாடு வனத்துறை, தமிழ்நாடு வனத்தோட்டக் கழகம், தமிழ்நாடு வன வளர்ப்புக் கழகம் ஆகியவற்றின் பணியாளர்கள் சார்பாக 50 லட்சத்து 63 ஆயிரத்து 482 ரூபாய்.
4. மாண்புமிகு உணவுத்துறை அமைச்சர் திரு.ஆர். காமராஜ் அவர்கள் பொது விநியோகம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையரகம், தமிழ்நாடு கிடங்கு கழகம், மாநில நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையரகம் ஆகியவற்றின் பணியாளர்கள் சார்பாக 1 கோடியே 6 லட்சம் ரூபாய்.
5. எதிர்க்கட்சி துணைத் தலைவர் திரு. பண்ருட்டி எஸ். ராமச்சந்திரன், எம்.எல்.ஏ. அவர்கள் தே.மு.தி.க. சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியம் - 15 லட்சம் ரூபாய்.
6. திரைப்பட நடிகர் திரு. கமல்ஹாசன் அவர்கள் 15 லட்சம் ரூபாய்.
7. மாலை முரசு நாளிதழின் நிர்வாக ஆசிரியர் திரு.பி. ராமச்சந்திரா ஆதித்தன் அவர்கள் 10 லட்சம் ரூபாய்.
8. திரு. பொள்ளாச்சி என். மகாலிங்கம் அவர்கள் சக்தி குழும நிறுவனத்தின் சார்பாக 1 கோடி ரூபாய்.
9. சென்னை, அமால்கமேஷன் பிரைவேட் நிறுவனத்தின் தலைவர் திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் 1 கோடி ரூபாய்.
10. இந்தியன் வங்கியின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் திரு.டி.எம். பாஷின் அவர்கள் 1 கோடி ரூபாய்.
11. சென்னை சில்க்ஸ் இணை மேலாண்மை இயக்குநர் திரு. கே. மாணிக்கம் அவர்கள் 50 லட்சம் ரூபாய்.
12. தமிழ்நாடு பஸ் உரிமையாளர்கள் சங்கங்களின் சம்மேளத்தின் தலைவர் திரு. கே. தங்கராஜ் அவர்கள் 50 லட்சம் ரூபாய்.
13. ஜெமினி இன்டஸ்டீரிஸ் மற்றும் இமேஜிங் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திரு. ஏ. ரவிசங்கர் பிரசாத் அவர்கள் 50 லட்சம் ரூபாய்.
14. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. வி. கோபாலகிருஷ்ணன் அவர்கள் எஸ்.என்.ஆர். அறக்கட்டளையின் சார்பாக 30 லட்சம் ரூபாய்.
15. அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு. கே. அய்யப்பன் அவர்கள் 25 லட்சம் ரூபாய்.
16. கும்பகோணம், சிட்டி யூனியன் வங்கியின் மேலாண்மை இயக்குநரும், முதன்மை செயல் அலுவலருமான டாக்டர் என். காமகோடி அவர்கள் 25 லட்சம் ரூபாய்.
17. தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் திரு. ஆர். பன்னீர்செல்வம் அவர்கள் 20 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்.
18. வேல் டெக் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் டாக்டர் கே. ரங்கராஜன் மகாலஷ்மி அவர்கள் 20 லட்சம் ரூபாய்.
19. சென்னை பிரஸ் கிளப் சார்பாக 10 ஆயிரம் ரூபாய்.
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களிடம், ‘தானே’ புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வுக்காக 8 கோடியே 50 லட்சத்து 97 ஆயிரத்து 120 ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இன்று (1.2.2012) ஒரு நாளில் மட்டும் அளிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை வழங்கப்பட்ட தொகை 64 கோடியே 84 லட்சத்து 7 ஆயிரத்து 747 ரூபாயாகும்.
இத்தகவல் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
தானே நிவாரண நிதி: ஒரே நாளில் 8.5 கோடி வசூல்!