இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: தமிழகம் தமிழகமெங்கும் பனிமூட்டம் - வாகனப் போக்குவரத்து பாதிப்பு

தமிழகமெங்கும் பனிமூட்டம் - வாகனப் போக்குவரத்து பாதிப்பு

சென்னை உள்ளிட்ட தமிழகத்தில் பல மாவட்டங்களில் இன்று அதிகாலை கடும் பனிமூட்டம் நிலவிய காரணத்தால் வாகனப்போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டது.

கடற்கரையில் நடைப்பயிற்சி செல்பவர்கள் எதிரே வருபவர் தெளிவாகத் தெரியாத அளவுக்கு பனிமூட்டம் இருந்ததாக  தெரிவித்தனர். மலைப் பிரதேசங்களில் இருப்பதுபோல் பனி மூட்டத்தை உணர்ந்ததாகவும் சிலர் தெரிவித்தனர்.இந்த பனிமூட்டத்தால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் நெடுஞ்சாலைகளில் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டனர்.

மேலும்,ரயில் சேவையும் பாதிக்கப்பட்டது. ரயில்களின் வேகத்தைக் குறைத்து ஓட்டும்படி ரயில்வே நிர்வாகம் உத்தரவு பிறப்பித்திருந்தது. சென்னையில் விமான சேவைகளும் பாதிக்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் நிலவிய இந்தப் பனி மூட்டத்திற்கு தரைக்காற்றின் ஈரப்பதம் அதிகரித்ததே காரணம் என்றும், படிப்படியாக சில மணி நேரத்தில் பனிமூட்டம் குறையும் என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் தெரிவித்த்தார்.

 

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)


Latest Articles: