
தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் பிரமுகர் சபீர் அலி, முதல்வர் தனிப் பிரிவில் அளித்த மனுவில் ,"கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக, சிலரது தூண்டுதலின் பேரில், உதயகுமார் தலைமையில் தினமும் போராட்டம் நடக்கிறது. .உதயகுமார் மீது, 164 வழக்குகள் இருந்தும், அவர் கைது செய்யப்படவில்லை. . அங்குள்ள மக்களை குழப்புவதோடு, நாட்டுக்கு எதிராகவும் பேசுகின்றனர். இதனால் மக்களுக்கு இடைஞ்சல் ஏற்படுகிறது.
எனவே இந்திய இறையாண்மைக்கு குந்தகம் ஏற்படுத்தும் அவரை, தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று அம்மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
கூடங்குளம் உதயகுமாரை தே.பா.சட்டத்தில் கைது செய்ய கோரிக்கை