இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: தமிழகம் வேட்பாளரை அறிவித்தார் விஜயகாந்த் – தேர்தல் களம் சூடுபிடிப்பு

வேட்பாளரை அறிவித்தார் விஜயகாந்த் – தேர்தல் களம் சூடுபிடிப்பு

சங்கரன்கோவில் தொகுதியில் அடுத்தம் மாதம் 18ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. அ.தி.மு.க., தி.மு.க., ம.தி.மு.க. ஆகிய கட்சிகள் தங்களது வேட்பாளரை அறிவித்து தேர்தல் களத்தில் தீவிரமாக பணியாற்றி வருகின்றன.

இந்நிலையில் சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் தேமுதிக சார்பில் கே.முத்துக்குமார் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து விஜயகாந்த் வெளியிட்ட அறிவிப்பில்  சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் திருநெல்வேலி மேற்கு மாவட்ட கழகத்தின் துணை செயலாளர் முத்துக்குமார், பி.இ,எம்பிஏ  வேட்பாளராக போட்டியிடுகிறார் என்பதை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

கடந்த 2006 சட்டமன்ற தேர்தலில் சங்கரன்கோவில் தொகுதியில் போட்டியிட்டவர். இவர் சங்கரன்கோவில் நகரத்தில் வசிக்கிறார்.

.இந்த இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் முத்துச்செல்வியும், திமுக சார்பில் ஜவஹர் சூரியக்குமாரும், மதிமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் சதன் திருமலைக்குமாரும் போட்டியிடுகின்றனர். பாஜகவும் இந்த தேர்தலில் போட்டியிடுவோம் என்று அறிவித்துள்ளது.

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)


Latest Articles: