தேமுதிகவின் பொதுக்குழுக் கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்திலுள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
அதே மண்டபத்தில் கட்சியின் செயற்குழுக் கூட்டமும் அன்றே சற்று முன்னதாக நடைபெற்றது.
பொதுக்குழுவில் தேமுதிக கட்சியின் தலைவராகவும், பொதுச் செயலாளராகவும் இரண்டு பதவிகளுக்கும் விஜயகாந்த் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதுவரை தலைவர் பொறுப்பை மட்டுமே விஜயகாந்த் வகித்து வந்தார்.இன்றிலிருந்து பொதுச் செயலாளர் பொறுப்பையும் அவரே வகிக்கவுள்ளார்
இன்று முதலில் செயற்குழுவும், பின்னர் பொதுக்குழுக் கூட்டமும் நடைபெற்றது. கூட்டத்திற்கு வந்தவர்கள் படக்கருவிகளோ, கைபேசிகளோ கொண்டு வரத் தடை விதிக்கப்பட்டிருந்தது
கூட்டங்களில் பங்கேற்க வந்த விஜயகாந்த்துக்கு தடபுடலான வரவேற்பு அளிக்கப்பட்டிருந்தது.
சட்டமன்றத் தேர்தலில் கூட்டணியில் சேர்த்துக்கொண்ட அதிமுக, ஆட்சிக்கு வந்த பின்னர் தேமுதிகவுக்கு உரிய மரியாதையை அளிக்காதிருந்தது.
இந்நிலையில் சட்டமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் எதிர்கட்சித் தலைவரான விஜயகாந்துக்கும் ஏற்பட்ட வாக்குவாதங்களும் சவால்பேச்சுகளும் இக்கூட்டணியின் முறிவுக்கும் வழிவகுத்துள்ளது.
இந்நிலையில், கட்சியின் இரு முக்கியப் பொறுப்புகளில் தன்னையே அமர்த்திக்கொண்டுள்ளார் விஜயகாந்த்.
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
தேமுதிக : இரட்டை வேடத்தில் விஜயகாந்த்
Comments
இப்பதிவுக்கான கருத்துகளின் RSS feed