இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: தமிழகம் ஜெயலலிதா மீதான பிடிவாரண்ட் ரத்து!

ஜெயலலிதா மீதான பிடிவாரண்ட் ரத்து!

ஜெயலலிதா மீதான பிடிவாரண்ட் ரத்துதமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தேர்தல் விதிமுறையை மீறியது தொடர்பாக நீண்ட காலமாக பரங்கிப்பேட்டை நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கில், ஜனவரி 4-ம் தேதி பரங்கிப்பேட்டை நீதிபதி கோமதி சக்தி ஸ்வரூப் அவர்களால் ஜெயலலிதாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

கடலூ‌ர் அம‌ர்வு ‌நீ‌தி‌ம‌ன்ற‌த்‌தி‌ல் இ‌ந்த ‌பிடிவார‌ண்டை ர‌த்து செ‌ய்ய‌க் கோ‌ரி ஜெய‌ல‌லிதா சா‌ர்‌பி‌ல் மனு‌ தா‌க்க‌ல் செ‌ய்ய‌ப்ப‌ட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி உத்ராபதி இந்த வழக்கு தொடர்பாக 2007 -ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மேற்கோள் காட்டி ஜெயலலிதாவுக்கு பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட்டை ரத்து செய்து உத்தரவிட்டார்.

முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்த நீதிபதி கோமதி சக்தி ஸ்வரூப் வேறொரு வழக்கில்  லஞ்சம் பெற்றதாக வந்த  புகாரின் அடிப்படையில் கடந்த வாரம் "சஸ்பெண்ட்" செய்யப்பட்டுள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

- சிராஜ்

 

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)


Latest Articles: