நாஞ்சில் சம்பத் முடிவில் திடீர் மாற்றம்!

சென்னை(07 ஜன 2017): நாஞ்சில் சம்பத் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை சந்தித்துப் பேசியுள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு ஜெயலலிதா பரிசாக கொடுத்த இனோவா காரை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒப்படைத்தார் நாஞ்சில் சம்பத். அப்போது, தேர்தல் பிரசாரம் எதுவும் இல்லாததால் காரை ஒப்படைத்ததாக விளக்கம் அளித்தார். .

இந்த நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவை போயஸ் கார்டன் இல்லத்தில் நாஞ்சில் சம்பத் இன்று திடீரென நேரில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நாஞ்சில் சம்பத், 'அதிமுகவில் தொடர்ந்து பணியாற்றுவேன். சசிகலாவின் ஆணைகளை நிறைவேற்ற தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்ள இருக்கிறேன்' என தெரிவித்துள்ளார்.

அதிமுகவிலிருந்து விலகப்போவதாக சமீபத்தில் பேட்டியளித்திருந்த நாஞ்சில் சம்பத் திடீரென தனது முடிவை மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.