டெல்லி விரைகின்றனர் அதிமுக எம்.பிக்கள்!

Tuesday, 10 January 2017 21:21 Published in தமிழகம்

புதுடெல்லி(10 ஜன 2017): ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் இயற்ற வேண்டி கோரிக்கை வைக்க அதிமுக எம்.பிக்கள் டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்கவுள்ளனர்.

தமிழர் பண்பாட்டின் அடையாளமாக இருந்து வரும் ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த தடையை நீக்கி ஜல்லிகட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என ஒட்டுமொத்த தமிழகமே கொந்தளித்து போராடிக் கொண்டிருக்கிறது.

இது தொடர்பாக மத்திய அரசுக்கு பல நிலைகளில் கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. பல்வேறு தரப்பிலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. ஆனால் மத்திய அரசோ உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரட்டும் தெரிவித்துவிட்டது.

இந்த நிலையில் டெல்லியில் பிரதமர் மோடியை அதிமுக எம்பிக்கள் புதனன்று சந்திக்க உள்ளனர். இச்சந்திப்பின் போது, ஜல்லிக்கட்டு நடத்த வகை செய்யும் அவசர சட்டத்தை மத்திய அரசு பிறப்பிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட உள்ளது.

admk mps will be meet Prime minister Modi to propose on jallikattu

Last modified on Tuesday, 10 January 2017 21:23
Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.